பெல்ஜியத் தலைநகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 34 பேர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 22, 2024


பெல்சியத் தலைநகர் பிரசெல்சில் உள்ள சாவுன்டெம் வானூர்தி நிலையத்தில் 2 குண்டுகளும் நகரின் மத்தியிலுள்ள மால்பீக் பகுதியிலுள்ள சுரங்க ரயில் பாதையில் ஒரு குண்டும் வெடித்துள்ளன. நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.


பாரிஸ் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த முக்கிய நபரான சாலக் அப்தச்லாம் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களாகும் நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெறுள்ளன. இத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு அதியுயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


தாக்குதல் எதிரொலியாக பிரசெல்சுக்கு வந்துசெல்லும் அனைத்து யூரோஇசுடார் ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. வானூர்தி நிலையத்தில் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தற்கொலை பெல்ட் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.


இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், ஊகங்களின் அடிப்படையில் சிலர் கருத்துக்களை கூறி வருவதாக பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் டிடியே ரெய்ண்டர் தெரிவித்துள்ளார். வானூர்தி நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரின் உடலுக்கு அருகில் கலாச்னிகோவ் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வானூர்தி நிலையத்தில் தாக்குதல் 7.00 ஒ.ச.நே (7.00 GMT) நடந்த சில நிமிடங்களில், மெட்ரோ சுரங்க ரயில் பாதையிலும் (9.11 ஒ.ச.நே ) குண்டு வெடித்தது.


இசுலாமிய நாடு என்னும் தீவிரவாத அமைப்பு இக்குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அது அதிகாரிகளால் உறுதிபடுத்தப்படவில்லை.மூலம்[தொகு]