பொன்சேகா விடுதியில் இருந்து வெளியேறினார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், ஜனவரி 28, 2010

இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா கொழும்பில் ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் தங்கி இருக்கும் போது இராணுவத்தால் சூழப்பட்டிருந்தார். இதேவேளை இன்று விடுதியில் இருந்து பொன்சேகா வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. விடுதியில் இருந்து வெளியேறிய பொன்சேகா தனது வீடு நோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பொன்சேகா வெளியேறும் போது அவரது வாகனத்தை இராணுவத்தினர் முதலில் சோதிக்க முயன்றதாகவும் பின்னர் சோதிக்காமல் வெளியேற அனுமதி வழங்கியதாகவும் தெரியவருகின்றது.


தொடர்பான செய்திகள்

மூலம்

Bookmark-new.svg