போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு இலங்கையர்கள் சென்னையில் கைது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், சனவரி 19, 2010


இரண்டு இலங்கையர்கள் உட்பட மூவரை போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்படும் போது இவர்களிடம் 660 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் இருந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்தப் போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 60 இலட்சம் இந்திய ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


இவர்களை NCB South Zonal Unit இன் அதிகாரிகள் கிடைக்கப்பெற்ற ஒரு தகவல்கள் மூலம் கைதுசெய்துள்ளனர். இவர்களைக் கைது செய்யும் போது இவர்களிடம் இருந்து குற்றத்தை நிரூபிக்க கூடிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.


ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து மும்பாயைச் சேர்ந்தவர் தனது கைப்பெட்டியில் மறைத்து கொண்டுவந்த போதைப்பொருளை இலங்கையரிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் இதை இலங்கைக்குக் கடத்த இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மூலம்

Bookmark-new.svg