போப்பாண்டவர் ஐக்கிய இராச்சியம் செல்கிறார்
செப்டம்பர் 4, 2010
- 3 மார்ச்சு 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.
- 15 திசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது
- 9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
- 9 ஏப்பிரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இன்னும் இரு வாரங்களில் ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணம் செல்கிறார். செப்டம்பர் 16ஆம் நாள் தொடங்கி 19ஆம் நாள் வரை நீடிக்கும் இப்பயணம் வரலாற்று முதன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயண நிகழ்ச்சிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. வத்திக்கான் நகரிலிருந்து புறப்பட்டு அவர் முதலில் இசுகாத்துலாந்து நாட்டுத் தலைநகரான எடின்பரோ வந்து சேர்கிறார். அங்கே எலிசபெத் அரசியும் அவர்தம் கணவர் இளவரசர் பிலிப்பும் போப்பாண்டவரை வரவேற்பார்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகிய போப்பாண்டவர் ஆங்கிலிக்க சபைத் தலைவராகிய கான்டர்பரி பேராயரைச் சந்தித்து உரையாடுவார். பல சமயங்களைச் சார்ந்த தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.
இலண்டன் நகரிலுள்ள ஹைட் பூங்காவில் வழிபாடு நடத்துவார். பயணத்தின் இறுதி நாளாகிய 19ஆம் தேதி
போப்பாண்டவர் தலைசிறந்த கிறித்தவ அறிஞராகிய கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் (Cardinal John Henry Newman, 1801-1890, கர்தினால் பட்டம்: 1879) என்பவருக்கு அருளாளர் பட்டம் அளிக்கும் சடங்கை நிகழ்த்துவார். இறைபக்தியிலும் பிறரன்புப் பணியிலும் சிறந்து விளங்கிய ஒருவர் இறப்பிற்குப் பின்னும் கடவுளோடு உயிர்வாழ்கிறார் என்னும் உண்மையை அறிக்கையிட்டு, அவரைப் பிறருக்கு முன்மாதிரியாக நிறுத்துகின்ற சடங்கு அருளாளர் பட்டமளிப்பு (beatification) என்று அழைக்கப்படுகிறது. அன்னை தெரேசாவுக்கும் இப்பட்டம் வழங்கப்பட்டது தெரிந்ததே. இதற்கு அடுத்த படியாக வழங்கப்படுவது புனிதர் பட்டம் (canonization) என்னும் பெயரால் குறிக்கப்படுகிறது.
கர்தினால் நியூமன் ஆங்கிலிக்க சபையிலிருந்து விலகி 1845இல் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மூலம்
[தொகு]- போப்பாண்டவர் பயணம் thepapalvisit.org.uk
- Information on Pope Benedict XVI’s visit to the UK, நம்பர் 10, ஆகத்து 23, 2010
- Pope to visit Britain in 2010, பிபிசி, செப்டம்பர் 23, 2009