உள்ளடக்கத்துக்குச் செல்

போயிங் டிரிம் லைனர் 787 -ன் முதல் சோதனை ஓட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 15, 2009

போயிங் நிறுவனத்தின் டிரிம் லைனர் 787 முதல் சோதனை ஓட்டம் செவ்வாய் கிழமை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி ஏர் பஸ் நிறுவனத்தின் எ-380 க்கு போட்டியாக போயிங் நிறுவனத்தால் முன்னிருத்தப்படுகிறது.


போயிங் டிரிம் லைனர் 787

இந்த சோதனை ஓட்டம் இரண்டரை ஆண்டு காலதாமதுக்குப் பிறகு நடக்கிறது. வடிவமைபு கோளாறு, ஊழியர்களின் வேலை நிறுத்தம், சில பாகங்கள் பற்றாக்குறை போன்றவை இத்தாமதத்துக்கு காரணமாகும். இதன் 840 வானூர்தியை வாங்க பல நிறுவனங்கள் தயாராக இருந்தன, எனினும் கால தாமதத்தால் பல நிறுவனங்கள் விலகிக்கிக்கொண்டன.


இதன் சிறப்பு குறைவான எடையாகும். இதனால் இது குறைவான எரிபொருளையே செலவழிக்கும். இதன் காரணமாக இது நீண்ட தூரம் எரிபொருள் நிரப்பாமல் பறக்க முடியும். இந்த சோதனை ஓட்டத்துக்கு பின் தொடர்ச்சியாக 9 மாதங்களுக்கு இவ்வானூர்தி சோதனை ஓட்டத்தில் இருக்கும் அதாவது ஆறு வானூர்திகள் தொடர்ந்து பறப்பில் இருந்து இச்சோதனை மேற்கொள்ளப்படும்.


இவ்வானூர்தி திட்டத்துக்கு போயிங் நிறுவனம் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக வல்லுனர்கள் கூறியுள்ளார்கள்.


யப்பானின் ஏர் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு முதல் வானூர்தி விநியோகப்படும்.

மூலம்[தொகு]

  • [1] பிபிசி
  • [2] ருயூட்டர்ஸ்