மகாராட்டிரத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 2, 2016

இந்தியாவில் மாகராஷ்டிரா மாநிலத்தின் ராய்கட் பகுதியைச்சார்ந்த முருத் என்ற கடல் பகுதியில் சுற்றுலா சென்ற மாணவர்களில் பலபேர் கடல் அலையில் சிக்கிக்கொண்டனர். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள முருத் கடற்கரையில் சுற்றுலாவுக்காக வந்த மாணவர்களில் 13 பேர் கடலில் மூழ்கி பலியாயினர். இப்பகுதி மும்பையிலிருந்து 140 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இவர்கள் அனைவரும் 19 வயதுமுதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அறியப்படுகிறார்கள். இவர்கள் 3 பேர் பெண்கள் ஆவார்கள்.

மூலம்[தொகு]

[1] [2]