மதுரை தொடருந்து நிலையத்தில் கூடுதல் நடைமேம்பாலங்கள்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், நவம்பர் 21, 2013

மதுரை தொடருந்து நிலையத்திற்கு தினசரி 35 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக கூடுதல் நடை மேம்பாலம் அமைக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக மதுரை மாநகர் கருதப்படுப்படுகிறது. இங்குள்ள தொடருந்து நிலையத்தில் தினசரி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் தெற்கு நகரங்களை, வடக்கு நகரங்களோடு இணைக்கும் முக்கிய புறப்படும் புறப்படும் நேரங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்குள்ள பழைய நடை மேம்பாலம் பழுதானதால், சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பயணிகள் தற்போது புதிய நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதால், நெரிசல் அதிகம் உள்ளது. நுழைவு வாயிலிலிருந்து புதிய மேம்பாலம் சற்று தள்ளியிருப்பதாலும், படிகட்டுகள் உயரமாக இருப்பதாலும், முதியோர், பெண்களுக்கு சிரமமாக உள்ளது. தானியங்கி படிக்கட்டுகள் இருந்தும்கூட, நெரிசல் காரணமாக நடை மேம்பாலங்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பண்டிகை காலங்களில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க பழைய நடைபாதை பாலத்திற்கு அருகில் ஒரு நடை மேம்பாலத்தை அமைக்க ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து, மதுரை தொடருந்து நிலையத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதனை, கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமை தாங்கி. கூடுதல் மேலாளர் அஜீத்குமார் முன்னிலை வகித்தார். வர்த்தக மேலாளர் கோவிந்தப்பராஜ், ஸ்டேஷன் மேலாளர் சாலமோன் சிவத்தையா, துணை தலைமை பொறியாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக மதுரையின் சிறப்புகளான மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், வண்டியூர் தெப்பக்குளம் போன்றவைகளை ஓவியமாக வரைய 4 இடங்களை கோட்ட மேலாளர் ரஸ்தோகி உத்தரவின் பெயரில், நிலைய மேலாளர் தேர்வு செய்து கொடுத்தார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg