மெக்சிகோ சிறை வன்முறையில் 29 பேர் பலி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 16, 2010

மெக்சிக்கோவின் வட மேற்கு மாநிலமான சினலோவாவில் சிறையில் எதிர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 29 பேர் உயிரிழந்தனர். மேலும் மிசுவாகானில் போதை மருந்து கடத்தல்காரர்கள் மறைந்திருந்து தாக்கியதில் 12 காவலர்கள் பலியாயினர். மிசுவாகானும் சினலோவாவும் போட்டி போதை மருந்து கடத்துபவர்களின் இருப்பிடமாகும்.


சினலோவாவில் உள்ள மாசட்லான் சிறையில் ஒரு போதை கட்டத்தல் குழு துப்பாக்கி மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் கொண்டு உள் நுழைந்து எதிர் குழு சிறைவைக்கப்பட்டிருந்த அறையில் சுட்டதில் 18 பேர் உயிரிழந்தனர்.


சிறையின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட சண்டையில் 11 பேர் குத்தப்பட்டு இறந்தனர்.


உள்ளூர் செய்திகளின் படி இறந்தவர்களில் பலர் சீட்டா குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சினலோவா குழுவுடன் போதை மருந்து கடத்தல் பாதையை கைப்பற்ற சண்டையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


டிசம்பர் 2006 முதல் 23,000 பேர் போதை மருந்து தொடர்பான வன்முறையில் உயிரிழந்துள்ளார்கள்.

மூலம்[தொகு]