மெக்சிக்கோவில் பெரும் நிலநடுக்கம், இருவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, திசம்பர் 11, 2011

மெக்சிக்கோவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற 6.7-அளவு நிலநடுக்கம் கட்டடங்களை அதிர வைத்தது. மக்கள் பலரும் வீடுகளை விட்டு வீதிகளுக்கு விரைந்தனர்.


மேற்கு மாநிலமான குவெரேரோவை நேற்றிரவு உள்ளூர் நேரம் 19:47 அளவில் தாக்கியது. இதன் தாக்கம் தலைநகர் மெக்சிக்கோ நகரிலும் உணரப்பட்டது.


இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இகுவாலா நகரில் வீட்டின் கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றும் ஒருவர் பயணம் செய்த வாகனம் ஒன்றின் மீது பாறை ஒன்று வீழ்ந்ததில் கொல்லப்பட்டார். நிலநடுக்கம் 65 கிமீ ஆழத்தில் இடம்பெற்றுள்ளது.


1985 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவில் இடம்பெற்ற 8.1 அளவு நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]