உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்சிக்கோவில் 50 சடலங்கள் அடங்கிய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 26, 2010

மெக்சிக்கோவின் வட மாநிலமான நியூ லியோனில் இருந்த புதைகுழி ஒன்றினுள் இறந்த உடல்கள் ஐம்பதிற்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இவ்வுடல்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தும் குழுவினருக்கிடையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


உடல்களை அடையாளம் காணும் பணியில் நிபுணர்கள் ஈடுபாட்டுள்ளார்கள்.


கை, கால்கள் வெட்டப்பட்டு உடல் அவயவங்கள் சித்திரவதைக்குள்ளானமை தெரியவந்துள்ளது. சிலரது உடல்களில் சூட்டுக் காயங்களும் காணப்பட்டுள்ளன. அனைவரது உடல்களும் ஆண்களுடையதாகும்.


குளிரூட்டப்பட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்ட இவ்வுடல்கள் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.


இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே புதைகுழி இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.


கடந்த மூன்றாண்டுகளில் 200 பேருக்கும் அதிகமானோர் எல்லப் பகுதிகளில் காணாமல் போயுள்ளனர். மெக்சிக்கோவில் 2006 டிசம்பர் முதல் 25,000 இற்கும் அதிகமானோர் கடத்தல் குழுவினரின் மோதல்களில் உயிரிழந்துள்ளனர்.

மூலம்

[தொகு]