உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு சப்பானில் சூறாவளி தாக்கியதில் பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 5, 2011

சப்பானின் மேற்குப் பகுதியைக் கடந்த சனிக்கிழமை அன்று டலாஸ் என்ற சூறாவளி தாக்கியதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


சிக்கோக்கு தீவைத் தாக்கிய சூறாவளி டலாஸ் இப்பகுதியில் பெரும் வெள்ளப் பெருக்கத்தையும், நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. 50 பேருக்கு அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஆண்டு தோறும் சப்பானை சூறாவளிகள் தாக்கி வருகின்றன. ஆனாலும் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே கடுமையான சூறாவளி எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 460,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


டலாஸ் சூறாவளி தற்போது சப்பானைத் தாண்டி சப்பான் கடல் (கிழக்குக் கடல்) நோக்கிச் சென்றுள்ளதாக சப்பானியக் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. ஆனாலும், பெரும் மழை, மற்றும் கடும் காற்று தொடர்ந்து இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]