மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், பெப்ரவரி 5, 2014

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியரான சத்ய நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.


சத்ய நாடெல்லா

உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் அமெரிக்க வாழ் இந்தியர், சத்ய நாதெல்லா தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். தனது 25வது வயதில் மைக்ரோசாப்ட்டில் சேர்ந்த நாதெல்லா, கடந்த 22 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததற்காக இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்நிறுவனத்தை வழிநடத்த சத்ய நாதெல்லாவைவிடச் சிறந்த நபர் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg