யாழ்ப்பாணத்தில் குண்டு வெடித்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 16, 2010


யாழ்ப்பாண நகரில் இடம்பெற்ற ஒரு குண்டுவெடிப்பில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 8 சிறுவர்கள் படுகாயமடைந்தனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


யாழ்ப்பாண மாவட்டம்

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் வீதியில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்து குத்திப் பார்த்தபோது அது வெடித்ததால் இரண்டு சிறார்களும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இந்தச் சம்பவம் கொழும்புத்துறை இலந்தைக்குளம் புளியடிச்சந்தியில் திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது.


உயிரிழந்தவர்கள் அரியாலை ஏ.வி. பாதையைச் சேர்ந்த 9 வயதான ஏ.லக்சன், 10 வயதான ஆர்.ராம்சிங் என இனங்காணப்பட்டுள்ளனர்.


காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஒரு மாணவன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் ஏனையவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லையெனவும் யாழ் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம்