யாழ்-கொழும்பு பேருந்து வவுனியாவில் விபத்துக்குள்ளாகியதில் 2 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, சனவரி 17, 2010

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று தடம் புரண்டதில் இருவர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.


இந்த விபத்து இன்று அதிகாலையில் உள்ளூர் நேரம் 01:32 மணிக்கு வவுனியாவில் இடம்பெற்றது.


யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து வவுனியாவில் பாதைஅயை விட்டு விலகியதில் மரம் ஒன்றுடன் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதன் போது அதன் சாரதியும் பயணி ஒருவரும் உயிரிழந்ததாக இவ்விபத்து குறித்து வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.


சாரதியின் கவனயீனமான ஓட்டமே இவ்விபத்துக்குக் காரணம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூலம்

Bookmark-new.svg