உள்ளடக்கத்துக்குச் செல்

லெபனானில் அரசில் இணைவதற்கு எதிர்க்கட்சி இணக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 8, 2009


லெபனான் அரசில் இணைவதற்கு எதிர்க்கட்சியான ஹெஸ்புல்லா ஒப்புக் கொண்டது. இதன் மூலம் கடந்த ஐந்து மாதங்களாக நிலவி வந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.


புதிய அரசு குறித்த அறிவிப்பை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட சாட் ஹரிரி விரைவில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


லெபனானில் இசுரேல் ஊடுருவியபோது ஒரு தீவிரவாத அமைப்பாக உருவானது ஹெஸ்புல்லா அமைப்பு. சிரியா, ஈரான் ஆதரவிலான கட்சிகளின் ஒத்துழைப்போடு பிரதான கட்சியாக உருவெடுத்துள்ளது ஹெஸ்புல்லா. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதன் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பங்கேற்று அரசில் சேர ஒப்புக் கொண்டார்.


தற்போது பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ஹரிரிக்கு அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளன.


30 பேரடங்கிய அமைச்சரவையில் ஹரிரி தலைமையிலான உறுப்பினர்கள் 15 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும். இதேபோல ஹெஸ்புல்லாவுக்கு 10 அமைச்சர்களும் அதிபர் மைக்கேல் சுலேமான் நியமனத்தில் 5 முக்கிய அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

மூலம்

[தொகு]