உள்ளடக்கத்துக்குச் செல்

வட கொரியாவின் உயர் தலைவராக கிம் ஜொங்-உன் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 30, 2011

மரணமடைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல் அவர்களின் இளைய மகன் கிம் யொங்-உன் தலைநகர் பியொங்யாங்கில் பெருமளவு மக்கள் முன்பாக கட்சியினதும், நாட்டினதும், இராணுவத்தினதும் அதியுயர் தலைவராக பிரகடனம் செய்யயப்பட்டார்.


கிம் ஜொங்-இல்லின் இறுதி நிகழ்வு நேற்று இடம் பெற்ற போது திரண்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதியுயர் தலைவராக இவர் தெரிவுசெய்யப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்போது ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அணிவகுத்திருப்பது வட கொரிய தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.


தனது தந்தையைப் போன்ற கொள்கை மற்றும் குணாதிசயங்களை கொண்டவர் அவர் என்று விவரிக்கப்பட்டார். இன்னும் முப்பது வயது கூட நிரம்பாதவர் கிம் யாங்-உன். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இப்படி ஒருவர் இருப்பதே அந்நாட்டு மக்களுக்குத் தெரியும்.


கிம் ஜொங்-இல் கடந்த 17ம் திகதி மாரடைப்பால் தனது 69 ஆவது அகவையில் காலமானார். அவரது இறுதிக்கிரியை நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினத்தில் ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன.


இதில் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ள கிம் ஜொங்-உன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். எனினும் கிம் ஜொங்-இல்லின் மூத்த மகன்கள் இருவரும் இறுதிக் கிரியை நிகழ்வுகளில் காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]