வெலிக்கடைச் சிறைச்சாலையை விற்க அரசு திட்டம்
Appearance
செவ்வாய், சூலை 27, 2010
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் அமைவிடம்
இலங்கையின் முக்கியமான சிறைச்சாலைகளில் ஒன்றான வெலிக்கடைச் சிறைச்சாலையின் வளாகத்தை அரசு விற்பனையில் இட திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறைச்சாலை முறைமைகளை மறுசீரமைக்கும் பணியின் ஒரு அங்கமாகத் தொடங்கப்படவுள்ளது.
கொழும்பு நகரில் 40 ஏக்கர் பரப்பில் உள்ள வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்தை விற்பதன் மூலம் அரசு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பிற்கு பெருமளவில் பணம் கிடைக்கும் என்று நம்புகின்றது. இதே வரிசையில் மகசின் சிறைச்சாலை, யாழ்ப்பாணம் சிறைச்சாலை என்பனவும் வேறு இடங்களிற்கு மாற்றப்படும் என்று புணர்வாழ்வு அமைச்சர் குணசேகர தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- Prison land for sale, டெய்லி மிரர்