உள்ளடக்கத்துக்குச் செல்

10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் சனவரி 11-ம் திகதி துவக்கம் கல்வித்துறை அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 19, 2015

இந்தியாவின் தென்புலமான தமிழ்நாட்டில், தொடர்மழையால் தள்ளிவைக்கப்பட்ட 10-ஆம், 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகள், வரும் 2016 சனவரி 11-ம் திகதி முதல்- 27-ம் திகதி முடிய நடைபெறும் என தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன், நேற்று வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தொடர்மழை காரணமாக, 10 மற்றும் 12-ம் வகுப்புகளின் அரையாண்டு பொதுத்தேர்வுகள் 2016 சனவரி 11-ல் தொடங்கி சனவரி 27-ம் வரையில் நடைபெறும் என அறிவித்தார்.


மூலம்[தொகு]