உள்ளடக்கத்துக்குச் செல்

சூடான் தேர்தலில் அரசுத்தலைவர் அல்-பசீர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 27, 2010

சூடானில் 24 ஆண்டுகளின் பின்னர் முதன் முதலாக இம்மாதம் இடம்பெற்ற பல-கட்சித் தேர்தல்களில் அந்நாட்டு அரசுத்தலைவர் ஒமார் அல்-பசீர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பகுதி-சுயாட்சிப் பிராந்தியமான தெற்கு சூடானில் இடம்பெற்ற தேர்தலில் முன்னாள் போராளித் தலைவர் சல்வா கீர் அதன் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதிபர் ஒமார் அல்-பசீர்

அல்-பசீர் 68 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதாக சூடானின் தேர்தல் வாரியம் அறிவித்திருக்கிறது. சல்வா கீர் அவரது பகுதியில் 93 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.


இத்தேர்தல்களில் பல மோசடிகள் இடம்பெற்ரதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அல்-பசீரின் இரண்டு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.


அல்-பசீர் போர்க்குற்றங்களுக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிரப்பிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

மூலம்

[தொகு]