உள்ளடக்கத்துக்குச் செல்

ஜமேக்கா வன்முறைகளில் 30 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 26, 2010

ஜமேக்காவின் தலைநகர் கிங்ஸ்டனில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் தேடப்பட்டுவரும் போதைப் பொருள் கடத்தல் தலைவர் ஒருவரைத் தேடி நூற்றுக்கணக்கான படையினர் தேடுதல் நடவடஇக்கையில் ஈடுபட்ட போதே இவ்வன்முறை வெடித்துள்ளது. 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.


கிறிஸ்தோபர் கோக் என்ற போதைப்பொருட் கடத்தல் தலைவரை நாடு கடத்த ஜமேக்க அரசு நடவடிக்கை எடுத்ததை அடுத்தே வன்முறை வெடித்தது.


கோக்கைக் கைது செய்வதற்காக திங்கட்கிழமை அன்று மேற்கு கிங்ஸ்டனில் டிவொலி கார்டன்சைச்க் காவல்துறையினர் முற்றுகையிட்டனர். ஆனாலும் கோக்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கோக்குக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டிருந்தனர்.


தலைநகரில் பள்ளிகள் மற்றும் வர்ததக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. கிங்க்ஸ்டனின் பல பகுதிகளில் அவசரகால நிலை கொண்டுவரப்பட்டிருந்தது.


சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ம் என்று தலைமை அமைச்சர் புரூஸ் கோல்டிங் அறிவித்தார்.


தான் ஒரு சட்டபூர்வமான வர்த்தகர் என்றும் கிங்ஸ்டனில் வறுமையில் வாடும் பல்லாயிரக்கணக்கானோர் தமக்கு ஆதரவாக இருக்கின்றார்கள் என்றும் 41 வயதுள்ள திரு. கோக் கூறுகிறார். ஆனாலும் இவரை உலகின் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் காரர் என்று ஐக்கிய அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

மூலம்

[தொகு]