உள்ளடக்கத்துக்குச் செல்

ஈராக்கில் எண்ணெய் வயல்கள் ஏலம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 11, 2009


இராக்கில் இதுவரை பெற்றோலியம் எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படாத எண்ணெய் வயல்கள் பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.


பெரிய விலைக்கு ஏலத்தில் விடப்பட்ட தெற்கு இராக்கின் மஜ்னூண் எண்ணெய் வயலை ஐக்கிய இராச்சியத்தின் ஷெல் நிறுவனமும் மலேசியாவின் பெட்ரோனாஸ் எண்ணெய்க் கம்பனியும் பெற்றிருக்கின்றன.


அருகில் உள்ள ஹல்ஃபயா எண்ணெய் வயலின் உரிமைகள் சீன அரச பெற்றோலிய நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது.


ஆனால் பாக்தாதுக்கும் டியாலா மாகாணத்துக்கும் அருகில் உள்ள எண்ணெய் வயல்களை எவரும் ஏலத்தில் எடுக்கவில்லை.


உலகில் மூன்றாவது பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள இராக்கிய எண்ணெய் வயல்களில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு பாதுகாப்பு குறித்த கவலைகளே தடையாக இருக்கின்றன.

மூலம்

[தொகு]
"https://ta.wikinews.org/wiki/ஈராக்கில்_எண்ணெய்_வயல்கள்_ஏலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது