உள்ளடக்கத்துக்குச் செல்

பப்புவா நியூ கினி தலைவர் மைக்கேல் சொமாரே அரசியலில் இருந்து ஓய்வு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 28, 2011

பப்புவா நியூ கினியின் பிரதமரும், நீண்டகாலத் தலைவருமான சேர் மைக்கேல் சொமாரே சுகவீனம் காரணமாகப் பதவியில் இருந்து விலகினார்.


சேர் மைக்கேல் சொமாரே (2008 இல்)

1960களில் இருந்து பப்புவா நியூ கினியின் அரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த 75-அகவையுடைய சொமாரே இவ்வாண்டில் ஆரம்பத்தில் இருந்து இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.


1975 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிடம் இருந்து பப்புவா நியூ கினி விடுதலை பெற்ற நாளில் இருந்து சேர் சொமாரே நாட்டின் பிரதமராகப் பதவியில் இருந்து வந்தார். விடுதலை இயக்கத்தில் மிகத் தீவிரமாகப் பங்கு பறி வந்தார்.


சாம் அபால் தற்போது பதில் பிரதமராகப் பதவி வகிக்கிறார். புதிய பிரதமர் எப்போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இம்மாத ஆரம்பத்தில் இவர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சரைப் பதவியில் இருந்து அகற்றியிருந்தார். அண்மையில் இவரது வீட்டில் பெண் ஒருவரின் இறந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து இவரது வளர்ப்பு மகன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


பொதுத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெறும்.


மூலம்

[தொகு]