ஊழல் குற்றச்சாட்டுகளுக்கா தெற்கு சூடானில் 75 உயர் அரசு அதிகாரிகள் பணி நீக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 13, 2012

பெரும்தொகையான பணத்தைக் களவாடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 75 உயர் அரசு அதிகாரிகளைப் பணிகளில் இருந்து இடைநிறுத்தம் செய்தவதற்கு தெற்கு சூடானின் நாடாளுமன்றம் ஆதரவாக வாக்களித்தது.


களவாடப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை மீளச் செலுத்துமாறு தற்போதைய மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு அரசுத்தலைவர் சல்வா கீர் கடந்த மாதம் கடிதங்கள் அனுப்பியிருந்தார். இதனை அடுத்து 60 மில்லியன் டாலர்கள் வரை அரசுக்குத் திரும்பக் கிடைத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கடந்த ஆண்டு சூலை மாதத்தில் தெற்கு சூடான் விடுதலை பெற்றது. அரசு ஊழியர்கள் மத்தியில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினையாக அங்கு உள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


98 விழுக்காடு வருமானம் தரும் எண்ணெய் வயல்கள் சூடானுடனான எல்லைப் பிரச்சினையை அடுத்து மூடப்பட்டுள்ளதால் தெற்கு சூடான் பெருமளவு நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. தெற்கு சூடான் ஆப்பிரிக்காவின் மிகவும் பின் தங்கிய நாடுகளில் ஒன்றாகும்.


மூலம்[தொகு]