உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க இலங்கை - இந்தியா ஒப்பந்தம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டெம்பர் 7, 2011

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் என்.ரீ.பீ.சி. நிறுவனமும் கூட்டு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன.


இந்த அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தத்தில் இலங்கை சார்பாக மின்சார சபை தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரமவும் இந்தியா சார்பாக இந்திய என்.ரீ.பீ.சி. கம்பனி தலைவர் அருப்ரோய் செளத்ரியும் கையெழுத்திட்டனர்.


500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயன்திறனை நோக்காக அமைக்கப்படவுள்ள இந்நிலையத்தின் வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் டொலர் ஒதுக்கிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான செலவை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்க உள்ளன. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்ப்பார்கக்ப்படுகின்றது.


இத்திட்டத்திற்கு இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர் காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. அனல் மின் நிலையத்திற்கான உபகரணங்களை இந்தியா வழங்கும். 25 ஆண்டுகளுக்கு குறித்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும்.


இலங்கையில் அமைக்கப்படவுள்ள இந்த அனல் மின் நிலையம் இலங்கையின் இரண்டாவது அனல் மின் நிலையமாகும். ஏற்கனவே புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை எனுமிடத்தில் சீனா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முதலாவது அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது.


மூலம்

[தொகு]