வெனிசுவேலா விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு, 36 பேர் உயிர் தப்பினர்
செவ்வாய், செப்டம்பர் 14, 2010
- 31 மார்ச்சு 2017: வெனிசுவேலா நீதிமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றது
- 4 பெப்பிரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது
- 7 திசம்பர் 2015: வெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றது
- 16 பெப்பிரவரி 2014: வெனிசுவேலாவில் வன்முறைகளை அடக்க காவல்துறையினருக்கு அரசுத்தலைவர் உத்தரவு
- 29 திசம்பர் 2013: வெனிசுவேலாவில் அனைவருக்கும் வீடு
51 பேருடன் சென்ற விமானம் ஒன்று கிழக்கு வெனிசுவேலாவில் வீழ்ந்து நொறுங்கியதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
கொன்வயசா என்ற அரசு விமான நிறுவனத்தின் பயணிகள் ஜெட் விமனம் ஒன்று நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு புவெர்ட்டோ ஓர்டாசு என்ற நகரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
"உள்ளூர் உலோகத் தொழிற்சாலை ஒன்றின் மீதே இவ்விமானம் வீழ்ந்தது. அதிட்டவசமாக தரையில் இருந்த எவரும் காயமடையவோ அல்லது கொல்லப்படவோ இல்லை,” என உள்ளூர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் அன்கிருந்த தொழிலாளர்கள் உடனேயே விரைந்து சென்று காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தி உதவியதாக அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கோளாறே இவ்விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2005 ஆம் ஆண்டு வெனிசுவேலாவில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் 160 பேர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 2008 இல் இடம்பெற்ற ஒரு விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
மூலம்
[தொகு]- 15 die in Venezuela plane crash, but another 36 passengers survive ordeal, தி ஆஸ்திரேலியன், செப்டம்பர் 14, 2010
- Deaths in Venezuela plane crash, அல் ஜசீரா, செப்டம்பர் 14, 2010