உள்ளடக்கத்துக்குச் செல்

வெனிசுவேலா விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு, 36 பேர் உயிர் தப்பினர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டம்பர் 14, 2010

51 பேருடன் சென்ற விமானம் ஒன்று கிழக்கு வெனிசுவேலாவில் வீழ்ந்து நொறுங்கியதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.


கொன்வயசா என்ற அரசு விமான நிறுவனத்தின் பயணிகள் ஜெட் விமனம் ஒன்று நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு புவெர்ட்டோ ஓர்டாசு என்ற நகரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.


"உள்ளூர் உலோகத் தொழிற்சாலை ஒன்றின் மீதே இவ்விமானம் வீழ்ந்தது. அதிட்டவசமாக தரையில் இருந்த எவரும் காயமடையவோ அல்லது கொல்லப்படவோ இல்லை,” என உள்ளூர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் அன்கிருந்த தொழிலாளர்கள் உடனேயே விரைந்து சென்று காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தி உதவியதாக அவர் தெரிவித்தார்.


தொழில்நுட்பக் கோளாறே இவ்விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


2005 ஆம் ஆண்டு வெனிசுவேலாவில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் 160 பேர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 2008 இல் இடம்பெற்ற ஒரு விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம்

[தொகு]