காஸ்ட்ரோவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு கியூபா நாடாளுமன்றம் ஒப்புதல்
- 23 அக்டோபர் 2013: கியூபாவில் இரட்டை நாணய முறை விலக்கிக் கொள்ளப்படவுள்ளது
- 3 செப்டெம்பர் 2013: கியூபா-புளோரிடா கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்த அமெரிக்கப் பெண்
- 9 சூலை 2013: சினோடன் சர்ச்சை: அமெரிக்காவிற்கு ராவுல் காஸ்ட்ரோ கண்டனம்
- 1 ஏப்பிரல் 2012: திருத்தந்தையின் வருகையை அடுத்து கியூபாவில் புனித வெள்ளி விடுதலை நாளாக அறிவிப்பு
- 5 பெப்பிரவரி 2012: கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தனது நினைவுக்குறிப்புகளை வெளியிட்டார்
செவ்வாய், ஆகத்து 2, 2011
கியூபாவின் பின்னடைந்த பொருளாதாரத்தை மூம்படுத்தும் அரசுத் தலைவர் ராவுல் காஸ்ட்ரோவின் சீர்திருத்தங்களை ஏற்ற்றுக் கொள்ளுவதென அந்நாட்டின் தேசியப் பேரவை முடிவெடுத்துள்ளது.
சிறிய ரக வர்த்தக நிறுவனங்களை உருவாக்குதல், மேலாண்மையை நீக்கல் போன்ற இந்த சீரமைப்புகளுக்கு கியூபா கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே ஒப்புதல் வழங்கியிருந்தது. நாட்டின் சர்ச்சைக்குரிய குடிவரவு, குடியகல்வு மற்றும் பயனச் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரவிருப்பதாகவும் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். தனது சீர்திருத்தங்களைக் குழப்ப எத்தனிப்பவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார். சமூக, அரசியல் மாற்றங்கலை அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக காஸ்ட்ரோ தெரிவித்தார்.
இந்த சீரமைப்புகள் மூலம் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் எதிர்ப்பை காஸ்ட்ரோ சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். புதிய மாற்றங்களின் படி கட்சித் தலைவர்கள் பலர் தமது பதவிகளை இழக்க வேண்டி வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அரசுப் பணிகளைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேளாண்மை, சிறு வர்த்தகம், கட்டடத் தொழில் போன்றவற்றில் அரசின் ஆதிக்கம் குறைக்கப்படும்.
கியூப மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் குறித்து மனித உரிமைக் குழுக்கள் அரசைக் குறை கூறி வந்துள்ளன.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- கியூபாவில் அரசியல் சீர்திருத்தங்களை ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார், ஏப்ரல் 17, 2011
மூலம்
[தொகு]- Cuba National Assembly approves economic reforms, பிபிசி, ஆகத்து 2, 2011
- Cuba set to ease migration rules - Raul Castro, ரியா நோவஸ்தி, ஆகத்து 2, 2011