உள்ளடக்கத்துக்குச் செல்

காஸ்ட்ரோவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு கியூபா நாடாளுமன்றம் ஒப்புதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 2, 2011

கியூபாவின் பின்னடைந்த பொருளாதாரத்தை மூம்படுத்தும் அரசுத் தலைவர் ராவுல் காஸ்ட்ரோவின் சீர்திருத்தங்களை ஏற்ற்றுக் கொள்ளுவதென அந்நாட்டின் தேசியப் பேரவை முடிவெடுத்துள்ளது.


சிறிய ரக வர்த்தக நிறுவனங்களை உருவாக்குதல், மேலாண்மையை நீக்கல் போன்ற இந்த சீரமைப்புகளுக்கு கியூபா கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே ஒப்புதல் வழங்கியிருந்தது. நாட்டின் சர்ச்சைக்குரிய குடிவரவு, குடியகல்வு மற்றும் பயனச் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரவிருப்பதாகவும் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். தனது சீர்திருத்தங்களைக் குழப்ப எத்தனிப்பவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார். சமூக, அரசியல் மாற்றங்கலை அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக காஸ்ட்ரோ தெரிவித்தார்.


இந்த சீரமைப்புகள் மூலம் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் எதிர்ப்பை காஸ்ட்ரோ சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். புதிய மாற்றங்களின் படி கட்சித் தலைவர்கள் பலர் தமது பதவிகளை இழக்க வேண்டி வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அரசுப் பணிகளைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேளாண்மை, சிறு வர்த்தகம், கட்டடத் தொழில் போன்றவற்றில் அரசின் ஆதிக்கம் குறைக்கப்படும்.


கியூப மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் குறித்து மனித உரிமைக் குழுக்கள் அரசைக் குறை கூறி வந்துள்ளன.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]