சப்பான் ஒகி அணுவுலையை மறுதொடக்கம் செய்ததை அடுத்து மக்கள் போராட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 3, 2012

கடந்த ஆண்டு புகுசிமா அணுவுலையில் கதிரியக்கம் கசிந்த போதிலும், சப்பான் ஒகி அணுவுலையை மறுதொடக்கம் செய்துள்ளது. இதனைக் கண்டித்து ஒகி நகராட்சியில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் போராட்டம் நடத்தினர்.


ஓகி அணுவுலை

சுனாமியால் ஏற்பட்ட புகுசிமா அணுவுலை பாதிப்பிற்குப் பிறகு 50 அணுவுலைகளை சப்பான் மூடியிருந்தது. கடந்த மாதம் சப்பான் பிரதமர் அணுமின் நிலையங்களை மறுதொடக்கம் செய்வது பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானது என செய்தி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது முதற்கட்டமாக ஒகி அணுவுலையை தொடங்கியுள்ளனர்.


மூலம்[தொகு]