தேர்தல் நாளில் யாழ்ப்பாணத்தில் குண்டுச் சத்தங்கள்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 26, 2010


யாழ்ப்பாண நகரில் இன்று தேர்தல் தினத்தில் அதிகாலை 3:00 மணியளவில் குறைந்தது 4 குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்ததாக டெய்லிமிரர் பத்திரிகை அறிவித்தது.


யாழ்ப்பாணத்தில் ஓரிடத்தில் பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டாதாகவும் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.


தேர்தலைப் புறக்கணிக்கும்படி கேடுக் கொள்ளும் துண்டுப்பிரசுரங்கள் அங்கு விநியோகிக்கப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.


இதற்கிடையில், நேற்றிரவு 7:00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் அலுவலகத்துள் இரண்டு வெள்ளை வான்களில் வந்த முகமூடிதாரிகள் அங்கு கற்களை எறிந்ததாகவும், அதே நேரம், அச்சுவேலி, ஆவரங்கால் பகுதிகளில் தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வீடுகள் பல தாக்கப்பட்டதாகவும் தமிழ்நெட் இணையத்தளம் தெரிவிக்கிறது.

மூலம்