உள்ளடக்கத்துக்குச் செல்

170 பேருடன் சென்ற உருசியக் கப்பல் வொல்கா ஆற்றில் மூழ்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 10, 2011

170 இற்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று வொல்கா ஆற்றில் மூழ்கியதில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதாக உருசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


தத்தர்ஸ்த்தான் மாநிலம்

"மொத்தம் 140 பயணிகளும், 33 பணியாளர்களும் இந்த இரட்டைத்தட்டுக் கப்பலில் பயணித்தனர். அவ்வழியால் சென்ற வேறொரு கப்பல் இவர்களில் 55 பேரைக் காப்பாற்றியது," என அதிகாரிகள் தெரிவித்தனர்.


பல்காரியா என்ற இக்கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ நேரம் 13:58 மணிக்கு தத்தர்ஸ்த்தான் மாநிலத்தில் கான்ஸ்கோ-உஸ்தினோவ்ஸ்க்கி மாவட்டத்தில் சியூகியெவா என்ற ஊருக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டது. முன்னதாக 22 பேர் மட்டுமே இக்கப்பலில் பயணித்திருந்ததாகச் செய்திகள் தெரிவித்திருந்தன.


உலங்குவானூர்தி ஒன்றும், இரண்டு உயிர்காப்புப் படகுகளும் அவ்விடத்துக்கு விரைந்துள்ளன.


மூலம்

[தொகு]