தெற்கு சூடான் சண்டையில் 70 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 21, 2011

தெற்கு சூடான் இராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையே இடம்பெற்ற சண்டையில் 70 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


சூடான் மக்கள் விடுதலை இராணுவத்தினருக்கும் (எஸ்பிஎல்ஏ, SPLA) போராளிகள் தலைவர் ஜோர்ஜ் ஆத்தரின் ஆதரவுப் படைகளுக்கும் இடையே மூன்று மாநிலங்களில் சண்டை மூண்டது. இச்சண்டைகளில் 34 இராணுவத்தினரும், 36 போராளிகளும் உயிரிழந்ததாக விடுதலை இராணுவப் பேச்சாளர் பிலிப் அகுவர் தெரிவித்தார்.


கடந்த வாரம் இதே போன்ற சண்டை இடம்பெற்ற போது, தென் சூடானிய அரசு வடக்கு சூடானையும், அதன் தலைவர் ஒமார் அல்-பஷீரையும் நாட்டின் திரத்தன்மையைக் குலைப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தது. தெற்கின் போராளிகளுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதாக அது கூறியுள்ளது. இக்குற்றச்சாட்டை வடக்கு சூடான் மறுத்துள்ளது.


பல தசாப்த கால உள்நாட்டுக் கலவரங்களை அடுத்து, வரும் சூலை மாதத்தில் தெற்கு சூடான் விடுதலை பெற இருக்கிறது.


ஜெனரல் ஜோர்ஜ் ஆத்தர் கடந்த ஏப்ரலில் ஜொங்கிளெய் மாநிலத்தின் ஆளுநருக்கான தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததை அடுத்து அரசுக்கெதிரான கிளர்ச்சியை ஆரம்பித்தார்.


மூலம்[தொகு]