இரசிய சுரங்க வெடி விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
ஞாயிறு, மே 9, 2010
- 12 பெப்பிரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி
- 25 திசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்
- 20 திசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்
- 19 மார்ச்சு 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி
- 15 மார்ச்சு 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.
இரசியாவின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற மெத்தேன் வெடிவிபத்தொன்றில் 11 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
சைபீரியாவின் மேற்கு கெமெரோவா பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் பல தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் மேலும் 64 பேர் இன்னமும் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.
மெச்துரேச்சென்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள இந்த ரஸ்பாத்ஸ்கயா சுரங்கத்தில் இரண்டாவது வெடிவிபத்து ஒன்று இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. 20 மீட்புப் பணியாளர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
"சுரங்கத்தினுள் நிலைமை சீரானதும் மீட்புப் பணிகள் தொடரும். ஆனாலும் இப்போது மீட்புப் பணியாளர்களை அங்கு அனுப்புவது என்பது அவர்களைக் கொலைக்களத்துக்கு அனுப்புவது போன்றது," என்றார் கெமெரோவாவின் ஆளுநர் அமான் துலேயெவ்.
தலைநகர் மொஸ்கோவில் இருந்து கிழக்கே 3,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தச் சுரங்கத்தில் ஆண்டுக்கு எட்டு மில்லியன் தொன் நிலக்கரி உற்பத்தியாகிறது.
இரசியாவின் சுரங்கங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மூலம்
[தொகு]- Blast at Russian mine in western Siberia kills 11, பிபிசி, மே 9, 2010