2012 மாகாண சபைத் தேர்தல்: வடமத்திய மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது
Appearance
தேர்தல் தொடர்பான செய்திகள்
- இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கு அமைச்சர்கள் தெரிவு, தமிழர்கள் எவரும் இல்லை
- இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியமைப்பு
- 2012 தேர்தல்: கிழக்கு மாகாண சபைக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 8 சிங்களவர்கள் தெரிவு
- 2012 மாகாண சபைத் தேர்தல்: கிழக்கு மாகாணத்தில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை
- 2012 மாகாண சபைத் தேர்தல்: வடமத்திய மாகாணசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது
ஞாயிறு, செப்டெம்பர் 9, 2012
இலங்கையில் நேற்று இடம்பெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் இரண்டு கூடுதல் (போனஸ்) இடங்கள் உட்பட அதிகூடிய 21 இடங்களைப் பெற்று இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இம்மாகாண சபையில் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 11 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 1 இடத்தைக் கைப்பற்றியது.
- இறுதி முடிவுகள்
- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 338,552 வாக்குகள் (21 இடங்கள்)
- ஐக்கிய தேசிய கட்சி - 196,127 வாக்குகள் (11 இடங்கள்)
- மக்கள் விடுதலை முன்னணி - 16,066 வாக்குகள் (1 இடங்கள்)
மூலம்
[தொகு]- வட மத்திய மாகாண சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியது, தமிழ் மிரர், செப்டம்பர் 9, 2012
- இலங்கைத் தேர்தல் திணைக்களம்