உள்ளடக்கத்துக்குச் செல்

சைபீரியாவில் 30,000 ஆண்டுகள் பழமையான தாவரம் மீள உயிர்ப்பிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 21, 2012

30,000 ஆண்டுகளுக்கு முன்னர் அணில்களினால் நிலத்தடி உறைபனியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழங்களில் இருந்து தாவரங்களை வளர்த்தெடுத்திருப்பதாக உருசிய அறிவியலாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.


ஆர்க்ட்டிக் நிலத்தடி அணில்

சைபீரியாவின் கொலிமா ஆற்றங்கரைகளில் இந்தப் பழம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கல உயிரியற்பியல் கல்விக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் சிலெனி ஸ்டெனோஃபிலா (Silene stenophylla) என்ற இந்தத் தாவர வகையை உருவாக்கியிருக்கிறார்கள். தேசிய அறிவியல் அக்காதமியின் செயல்முறை அமர்வுகளில் இவ்வாய்வு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாய்வு வெளிவரும் முன்னர் சில நட்களுக்கு முன்னர் இக்குழுவின் தலைவர் பேராசிரியர் தாவீது கிலிச்சின்ஸ்கி இறந்து விட்டார். கொலிமா ஆற்றங்கரைகளில் அணில்களின் 70 இற்கும் அதிகமான குளிர்கால உறைவிடங்கள் இவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இது காலவரையில் உயிர்ப்பிக்கப்பட்ட மிகப்பழைய தாவரம் இதுவே என அவர்கள் கூறுகின்றனர். முன்னதாக 2,000 ஆண்டுகள் பழமையான பேரிச்சம்பழ விதைகள் இசுரவேலில் மசாடா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.


மூலம்

[தொகு]