உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்லாந்து தேர்தலில் எதிர்க்கட்சி பெரும் வெற்றி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 4, 2011

தாய்லாந்தில் நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நாடு கடந்த நிலையில் வாழும் முன்னாள் பிரதமர் சினவாத்திராவின் சகோதரியின் தலைமையிலான ஃபூ தாய் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சி மேலும் நான்கு சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.


யிங்லக் சினவாத்திராவின் தலைமையிலான கட்சி 265 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை பெற்றது. பிரதமர் அபிசித் வெச்சாசிவா சனநாயகவாதிகளின் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இக்கட்சி 160 இடங்களைப் பெற்றது.


2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து தக்சின் சினவாத்திரா பதவி இழந்தார். தம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காக தக்சின் தற்போது நாடு கடந்த நிலையில் துபாய் நகரில் வாழ்ந்து வருகிறார். தாய்லாந்து அரசியலில் மீண்டும் இணைவதற்கு தாம் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]