அக்டோபர் புரட்சி புகழ் அவுரோரா கப்பலில் இருந்து உருசியக் கடற்படையினர் வெளியேறினர்
- 17 பெப்ரவரி 2025: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்
- 17 பெப்ரவரி 2025: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.
செவ்வாய், அக்டோபர் 16, 2012
அக்டோபர் 1917 போல்செவிக் புரட்சியின் சின்னமாக இருந்த அவுரோரா கப்பலில் இருந்து உருசியக் கடற்படையினர் கடைசித் தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியேறினர். இக்கப்பல் இப்போது பொதுத்துறையைச் சேர்ந்த மாலுமிகளின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதாக படைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1917 அக்டோபர் புரட்சியில் இக்கப்பல் மிக முக்கிய பங்கு வகித்தது. போல்செவிக் தொழிலாளர்களும் படையினரும் சார் மன்னனின் குளிர்கால அரண்மனை மீதான தாக்குதலுக்கு முன்னோடியாக அவுரோரா கப்பல் வெற்றுக் குண்டை வீசித் தாக்குதலை ஆரம்பித்தது. அதன் பின்னர் கம்யூனிசவாதிகள் சென் பீட்டர்சுபர்க் நகரையும், பின்னர் தலைநகரையும் கைப்பற்றினர். 1944 ஆம் ஆண்டில் இக்கப்பல் பெத்ரோவ்ஸ்க்கி கரையில் நங்கூரமிட்டு, மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அன்று முதல் இது மத்திய கடற்படை அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இக்கப்பல் உருசியக் கடற்படைக்கு மீள வழங்கப்பட்டு, இதனைத் தொழிற்படுத்த ஊழியர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஆனாலும், இம்முடிவு பல அரசியல்வாதிகளாலும், பொது மக்களாலும் பலத்த எதிர்ப்புக்குள்ளானது.
மூலம்
[தொகு]- Russian Sailors Leave Avrora, ரியா நோவஸ்தி, அக்டோபர் 16, 2012