அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஒபாமாவின் திட்டத்துக்கு செனட் அங்கீகாரம்
வெள்ளி, திசம்பர் 25, 2009
- 15 பெப்பிரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
அமெரிக்கர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வழி செய்யும் அதிபர் பராக் ஒபாமாவின் முக்கிய உள்நாட்டு கொள்கைக்கு ஆதரவாக அமெரிக்க மேலவை (செனட்) வாக்களித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாளில், மேலவை உறுப்பினர்கள் (செனட்டர்கள்) வாக்களித்திருப்பது என்பது நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இதுவே முதல் முறை. எதிர்பார்த்தது போல குடியரசுக் கட்சியினர் இம்மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். மக்களாட்சிக் கட்சி செனட்டர்களுடன் இணைந்து இரண்டு சுயேட்சைகள் ஆதவாக வாக்களித்தனர்.
தற்போது மருத்துவக் காப்பீடு இல்லாத 30 மில்லியன் அமெரிக்கர்கள் இதனால் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 87 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது சட்டமாக பிரகடனம் செய்யப்படுவதற்கு, பிரதிநிதிகள் அவையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மசோதாவுடன் இது ஒத்துப் போக வேண்டும்.
1903 க்குப் பிறகு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான சமூக சட்டம் இது. | ||
—அதிபர் பராக் ஒபாமா |
"1903 க்குப் பிறகு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான சமூக சட்டம் இது" என்று இந்த வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
எந்த காரணத்துக்காக அரசியல்வாதிகள் வாஷிங்டனுக்குத் தேர்ந்தெடுத்து மக்களால் அனுப்பப்பட்டார்களோ, அந்தக் காரணங்களை அரசியல்வாதிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்கர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசியல்வாதிகள் பாடுபட வேண்டும் என்பதே அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பம் என்றும் அதிபர் குறிப்பிட்டார்.
மூலம்
[தொகு]- "President Obama hails Senate health bill support". பிபிசி, டிசம்பர் 24, 2009
- Dan Robinson "US Senate Approves Historic Health Care Reform Bill". Voice of America, டிசம்பர் 24, 2009
- Shailagh Murray and Debbi Wilgoren "Senate approves landmark health-care bill". வாசிங்டன் போஸ்ட், டிசம்பர் 24, 2009
- Robert Pear "Senate Passes Health Care Overhaul Bill". நியூயோர்க் டைம்ஸ், டிசம்பர் 24, 2009