உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஒபாமாவின் திட்டத்துக்கு செனட் அங்கீகாரம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 25, 2009


அமெரிக்கர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வழி செய்யும் அதிபர் பராக் ஒபாமாவின் முக்கிய உள்நாட்டு கொள்கைக்கு ஆதரவாக அமெரிக்க மேலவை (செனட்) வாக்களித்துள்ளது.


கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாளில், மேலவை உறுப்பினர்கள் (செனட்டர்கள்) வாக்களித்திருப்பது என்பது நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இதுவே முதல் முறை. எதிர்பார்த்தது போல குடியரசுக் கட்சியினர் இம்மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். மக்களாட்சிக் கட்சி செனட்டர்களுடன் இணைந்து இரண்டு சுயேட்சைகள் ஆதவாக வாக்களித்தனர்.


தற்போது மருத்துவக் காப்பீடு இல்லாத 30 மில்லியன் அமெரிக்கர்கள் இதனால் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 87 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


இது சட்டமாக பிரகடனம் செய்யப்படுவதற்கு, பிரதிநிதிகள் அவையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மசோதாவுடன் இது ஒத்துப் போக வேண்டும்.


1903 க்குப் பிறகு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான சமூக சட்டம் இது.

—அதிபர் பராக் ஒபாமா

"1903 க்குப் பிறகு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான சமூக சட்டம் இது" என்று இந்த வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.


எந்த காரணத்துக்காக அரசியல்வாதிகள் வாஷிங்டனுக்குத் தேர்ந்தெடுத்து மக்களால் அனுப்பப்பட்டார்களோ, அந்தக் காரணங்களை அரசியல்வாதிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.


அமெரிக்கர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசியல்வாதிகள் பாடுபட வேண்டும் என்பதே அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பம் என்றும் அதிபர் குறிப்பிட்டார்.

மூலம்

[தொகு]