ஆப்கானித்தான் தொடர்பான அமெரிக்காவின் இரகசிய உளவுத் தகவல்களை 'விக்கிலீக்ஸ்' வெளியிட்டது
செவ்வாய், சூலை 27, 2010
- 15 பெப்பிரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐக்கிய அமெரிக்காவின் உளவுது துறையினரின் போர்த் தகவல்கள் தொடர்பான 91,000 வரையான இரகசிய ஆவணங்களை விக்கிக்கசிவுகள் (Wikileaks) எனும் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போருக்கு உதவுவதற்காக பாகிஸ்தான் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளை பெற்றுக்கொண்டு மறைமுகமாக தலிபான்களுக்கும் உதவுவதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அதில் குறிப்பிட்ட விபரங்கள் எதுவும் உண்மையில்லை என பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
இணையத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் ரொய்டர் செய்தியாளர்கள் இருவரை பொதுமக்களுடன் சேர்த்து விமானத்தாக்குதல் மூலம் அமெரிக்கப் படைகள் சுட்டுக்கொல்வதாக கூறப்படும் படங்களும் இருக்கின்றன.
தற்கொலைப் படை பயங்கரவாதிகள் எனக் கருதி, அப்பாவிகள் 195 பேரை நேட்டோ படைகள் கொன்றதாகவும், அவர்களது தாக்குதலில் மேலும் 174 பேர் காயம் அடைந்ததாகவும் "விக்கிலீக்ஸ்' தெரிவித்துள்ளது.
இதுபோன்று அனுமதி இல்லாமல் ஆவணங்களை வெளியிடுவது, அமெரிக்கா மற்றும் அதனுடைய கூட்டு நாடுகளின் வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் கோபத்துடன் குறிப்பிட்டார்.
எனினும், வெளிப்படையான தன்மை, அதிகபட்சமான ரகசியத்துக்கு எதிராகவே இந்த ஆவணத்தை வெளியிட்டதாகவும், இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகப்பட வேண்டியதில்லை எனவும் "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறினார்.
இந்த ஆவணங்கள் எப்படி விக்கிலீக்ஸ் இணையத்தளத்துச் சென்றது என்பது குறித்த விசாரணைகளை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டில் ஈராக்கின் பக்தாத் நகரில் அமெரிக்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் படுகொலைகள் குறித்த காணொளியை ”விக்கிகசிவுகள்” இணையத்தளம் கடந்த ஏப்ரலில் வெளியிட்டிருந்தது. இதனைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க இராணுவ ஆய்வாளரான பிராட்லி மன்னிங் என்பவர் சென்ற மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
விக்கிலீக்ஸ் இணையதளம் பெயர் அறிவிக்காதவர்கள் பங்களிப்புகளையும் பாதுகாக்கப்பட்ட இரகசிய அரசு, நிறுவனங்கள் அல்லது சமய ஆவணங்களின் கசிவுகளையும் வெளியிடுகிறது. சுவீடனிலிருந்து இயங்கும் இந்த இணையத்தளத்தில் பங்களிப்பாளர்களின் விவரங்கள் அறிய இயலாதவாறும் தேடவியலாதவாறும் தனிச் செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிறுவிய ஓராண்டுகளுக்குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் தரவேற்றப்பட்டுள்ளது.
தொடர்புள்ள செய்திகள்
மூலம்
- US hunts Afghan war files leaker, அல்ஜசீரா, ஜூலை 27, 2010
- Afghanistan war leak papers will take 'weeks to assess', பிபிசி, ஜூலை 27, 2010
- ஆப்கானில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவி: இணைய தளம் மூலம் அம்பலம், தினமணி, ஜூலை 27, 2010
- அமெரிக்காவின் இரகசிய உளவுத்தகவல்கள் இணையத்தில் - பாகிஸ்தானின் இரட்டைவேடம் அம்பலம்?, 4தமிழ்மீடியா, ஜூலை 27, 2010