உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் பங்குச்சந்தை: ஏற்றத்துடன் முடிவடைந்தது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 16, 2011

இந்த வாரத்தின் மூன்றாம் நாளான இன்று (புதன் கிழமை)காலையிலிருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட இன்றைய பங்குச் சந்தை மாலையில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. தொடங்கிய சில நிமிடங்களில் மும்பைப் பங்குச்சந்தை(BSE), தொடக்கத்திலேயே அதிக அளவாக 18,490.21 புள்ளிகளை எட்டிப் பின்னர் சில வினாடிகளில் 18,462.07 என்ற அளவிற்குக் குறைந்து, பின்னர் மீண்டும் அதிரடியாக 18,222.94 என்ற அளவிற்க்குக் குறைந்தது. பிறகு அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட மும்பைப் பங்குச் சந்தை இன்றைய மிகக் குறைந்த அளவாக 18,217.51 வரை சென்றது. மாலையில் முடிவடையும் பொழுது 27.1 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று 18,300.90 புள்ளிகளில் முடிவடைந்தது.


தேசியப் பங்குச் சந்தை(NSE) தொடக்கத்திலேயே மிகக் குறைந்த அளவாக 5,406.5 என்ற அளவிற்குக் குறைந்து, பின் மீண்டும் 5,462.15 என்ற அளவில் உயர்ந்து பின் 50 புள்ளிகள் சீரான ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் நடைபெற்றது. மாலையில் முடிவடையும் பொழுது 5,481.70 புள்ளிகளில் 0.70 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.