உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் உலகப்போரின் பெற்ற வெற்றியின் 70வது ஆண்டு விழாவை ருசியா கொண்டாடியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 10, 2015

ருசியா சனிக்கிழமை அன்று நாசி செர்மனியை இரண்டாம் உலகப்போரில் வெற்றி கொண்டதன் 70ஆம் ஆண்டு விழாவை கொண்டாடியது.


இந்த விழாவில் பெரும் இராணுவ அணிவகுப்பு நிகழ்த்தப்பட்டது இதில் 16,000 வீரர்களும் 200 கவச ஊர்திகளும் 150 வானூர்திகளும் பங்கு பெற்றன.


இவ்விழாவில் சீன அதிபர் சி சின்பிங்கும் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ச்சி கூபா அதிபர், வெனிசுலா அதிபர் நிக்கோலசு முட்ரோ கசக்கசுத்தான் அதிபர், சிம்பாவ்வே அதிபர், தென் ஆப்பிரிக்க அதிபர், எகிப்தின் அதிபர், ஐக்கிய நாடுகள் தலைவர் பா கி முன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பல மேற்குல நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் நடைபெரும் சண்டைக்கு ருசியா காரணம் என்று கூறி விழாவைப் புறக்கணித்தனர்.


இவ்விழாவின் அணிவகுப்பில் ருசியாவின் புதிய இராணுவ பீரங்கியான ஆர்மடா டி-14 என்பதை அறிமுகப்படுத்தியது.


இரண்டாம் உலகப்போர் பெரும் தேசபக்த போர் என ருசியர்களால் அழைக்கப்படுகிறது. இப்போரில் 26 மில்லியனுக்கும் மேற்பட்ட ருசியர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் போரில் இறந்த 4 மில்லியன் ருசிய போர்வீரர்கள் உடல்கள் மீட்கப்படவில்லை என ருசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.


உக்ரைன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் நேச நாடுகளின் 70ஆம் ஆண்டு வெற்றியை தனியாக கொண்டாடின.


செருமனியின் வேந்தர் அங்கெலா மேர்க்கெல் சனிக்கிழமை நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை புறக்கணித்தாலும் ஞாயிறு அன்று மாசுக்கோ சென்று இரண்டாம் உலகப்போரில் உயர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.


இரண்டாம் உலகப்போரில் ருசிய அதிபர் புடினின் தந்தையும் பங்கெடுத்துள்ளார். ருசியாவில் உள்ளோரில் 70% க்கும் அதிகமானோரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராவது போரின் போது கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர்


ருசியாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி நாள் மே 09 அன்று கொண்டாடப்படும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வெற்றி நாள் மே 08 அன்று கொண்டாடப்படும்.


மூலம்

[தொகு]