உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஐநா அவையில் நிறைவேறியது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 23, 2013

ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், நேற்று முன்தினம் (மார்ச் 21) நிறைவேறியது. இந்தத் தீர்மானத்தை 25 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன; 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கப்போனின் பிரதிநிதி வாக்கு அளிக்க இயலவில்லை.


ஆதரித்து வாக்களித்த நாடுகள்

அமெரிக்கா, இந்தியா, அர்கெந்தீனா, ஆசுதிரியா, மான்டிநெக்ரா, எசுத்தோனியா, செக் குடியரசு, லிபியா, செருமனி, அயர்லாந்து, இத்தாலி, பெரு, போலந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, எசுப்பானியா மற்றும் கோட் டிவார்


எதிர்த்து வாக்களித்த நாடுகள்

பாக்கித்தான், இந்தோனேசியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா, ஐக்கிய அரசு அமீரகம், தாய்லாந்து, வெனிசுலா, பிலிப்பைன்சு, குவைத் மற்றும் மவுரிடானியா.


வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நாடுகள்

அங்கோலா, போட்சுவானா, பர்கினாபாசோ, எத்தியோப்பியா, சப்பான், கசகிசுதான், கென்யா மற்றும் மலேசியா


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீது ஐநா அவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது, மார்ச் 21, 2013


மூலம்[தொகு]