இலங்கையின் தேர்தல் ஆணையாளர் ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், சனவரி 20, 2010

இலங்கையின் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக தாம் இலங்கை அதிபர் தேர்தல் முடிவடைந்ததும் தேர்தல் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவித்துள்ளார்.


இன்று நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மத்தியில் இந்த தகவலை திசாநாயக அறிவித்தார்.


அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் தன்னால் பரிந்துரை செய்யப்பட்ட எந்த நடைமுறைகளையும் அரசியல் கட்சிகள் பின்பற்றவில்லை என அவர் தெரிவித்தார்.


இலங்கை அரசு ஊடகங்களை மேற்பார்வைசெய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழு செயற்பட முடியாமல் போன காரணத்தால் அதனைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார்.

மூலம்

Elections Commissioner to quit, டெய்லிமிரர், சனவரி 19, 2010

Bookmark-new.svg