உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அதிபர் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க அமெரிக்கா தூண்டுதல்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 18, 2010

எதிர்வரும் சனவரி 26ம் நாள் இலங்கையில் நடைபெறவுள்ள அரசுத் தலைவர் தேர்தலில் தமது விருப்புக்குரிய வேட்பாளரை ஆதரிப்பதுடன் இலங்கைக்கு முக்கியமான விடையங்கள் பற்றி விவாதித்து தேர்தலில் அனைவரும் வாக்களிக்க தாம் ஊக்கமளிப்பதாக அமெரிக்கத் தூதுவர் பட்ரிகா ப்யூட்டனிஸ் தெரிவித்துள்ளார்.


அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள் பற்றி அவர் கவலை தெரிவித்ததுடன் அவை இலங்கையின் மக்கள் ஆட்சி முறைமைக்கும், பாரம்பரியத்திற்கும் பாரிய சேதம் விளைவிக்ககூடியவை என்றும் தெரிவித்தார்.


இலங்கைத் தேர்தலில் அமெரிக்கா எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்றும், தமது கருத்துக்கள் அவ்வாறு எவரையும் ஆதரிக்காமல் இருக்கவேண்டும் எனபதில் தாம் மிக கவனமாக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி

மூலம்