இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச பெரு வெற்றி - அரசுத் தொலைக்காட்சி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 27, 2010


இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருப்பதாக அரசு தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.


மகிந்த ராஜபக்ச

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 57.88 விழுக்காடு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


தமிழர்கள் உள்பட சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா முன்னிலை பெற்றிருக்கிறார். தென்னிலங்கையில் அவரது சொந்தத் தொகுதியான அம்பலாங்ககொடவில் மகிந்த ராஜபக்ச அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.


தேர்தல் இறுதி முடிவுகளின் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 6,015,934 (57.88%) வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 4,173,185(40.15%) பெற்றுள்ளனர். பதியப்பட்ட மொத்த வாக்குகள் 10,495,451. செல்லுபடியான மொத்த வாக்குகள் 10,393,613.


மகிந்த ராஜபக்ச 16 மாவட்டங்களிலும் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா தமிழர் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 6 மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.


தேர்தல் முடிவு நிலவரங்களைப் பார்க்கும்போது, எதிர்க்கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா, சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிக்கத் தவறிவிட்டதாகவே தெரிகிறது என கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் சார்ல்ஸ் ஹவிலண்ட் கூறுகிறார்.

தோ்தல் முடிவுகள்

இரு பிரதான போட்டியாளர்களும் மாவட்ட மட்டத்தில் பெற்றுள்ள மொத்தவாக்குகள்:

கொழும்பு

மகிந்த ராஜபக்ச 614,740 சரத் பொன்சோகா 533,022

கம்பஹா

மகிந்த ராஜபக்ச 718,716 சரத் பொன்சேகா 434,506

காலி

மகிந்த ராஜபக்ச 386,971 சரத் பொன்சேகா 211,633

மாத்தறை

மகிந்த ராஜபக்ச 296,155 சரத் பொன்சேகா 148,510

அம்பாந்தோட்டை

மகிந்த ராஜபக்ச 226,887 சரத் பொன்சேகா 105,336

குருநாகல்

மகிந்த ராஜபக்ச 582,784 சரத் பொன்சேகா 327,594

அநுராதபுரம்

மகிந்த ராஜபக்ச 298,448 சரத் பொன்சேகா 143,761

பதுளை

மகிந்த ராஜபக்ச 237,579 சரத் பொன்சேகா 198,835

இரத்தினபுரி

மகிந்த ராஜபக்ச 377,734 சரத் பொன்சேகா 203,566

களுத்துறை

மகிந்த ராஜபக்ச 412,562 சரத் பொன்சேகா 231,807

கண்டி

மகிந்த ராஜபக்ச 406,636 சரத் பொன்சேகா 329,492

கேகாலை

மகிந்த ராஜபக்ச 296,639 சரத் பொன்சேகா 174,877

புத்தளம்

மகிந்த ராஜபக்ச 201,981 சரத் பொன்சேகா 136,233

மாத்தளை

மகிந்த ராஜபக்ச 157,953 சரத் பொன்சேகா 100,513

பொலநறுவை

மகிந்த ராஜபக்ச 144,889 சரத் பொன்சேகா 75,026

மொனறாகலை

மகிந்த ராஜபக்ச 158,435 சரத் பொன்சேகா 66,803

நுவரேலியா

சரத் பொன்சேகா 180,604 மகிந்த ராஜபக்ச 151,604

யாழ்ப்பாணம்

சரத் பொன்சேகா 113,877 மகிந்த ராஜபக்ச 44,154

மட்டக்களப்பு

சரத் பொன்சேகா 146,057 மகிந்த ராஜபக்ச 55,663

திகாமடுல்ல (அம்பாறை)

சரத் பொன்சேகா 153,105 மகிந்த ராஜபக்ச 146,912

வன்னி

சரத் பொன்சேகா 70,367 மகிந்த ராஜபக்ச 28740

திருகோணமலை

சரத் பொன்சேகா 87,661 மகிந்த ராஜபக்ச 69,752


மூலம்