இலங்கை அதிபர் தேர்தலில் 300,000 போலி வாக்குச் சீட்டுகள்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 23, 2010

எதிர்வரும் சனவரி 26ம் திகதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் 300,000 போலி வாக்குச்சீட்டுகளைப் சிலர் பாவிக்க முயல்வதாக தமக்குச் செய்தி கிடைத்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த போலி வாக்குச் சீட்டுகளைக் கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியையும் இலங்கை பொலீசார் நாடியுள்ளனர்.


கடந்தவாரம் கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் சுமார் 21,700 போலி வாக்குச் சீட்டுக்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அதன் தொடர்பாகவே இந்த புதிய செய்தியும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த 300,000 போலி வாக்குகளும் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதா என்று தாம் ஆராய்ந்து வருவதாக பொலிசார் அறிவித்தனார்.


மூலம்