ஈராக்கில் இடம் பெற்ற தொடர் தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 24, 2012

ஈராக்கில் ஆங்காங்கே இடம் பெற்ற தொடர் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நேற்று ஒரு நாளில் மாத்திரம் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 250 பேர் வரை காயமடைந்துள்ளார்கள். இவற்றில் பெரும்பாலான தாக்குதல்கள் தலைநகர் பாக்தாத்தில் நடந்துள்ளன. பாக்தாதில் மத்திய கர்ரடா மாவட்டம் தலைநகருக்கு வெளியே பகுபாவில் மொசூல், கிர்க்குக், சலாஹுதீன் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.


10 ஆண்டுகளாக நடந்த போருக்குப்பின், கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமெரிக்க படைகள் ஈராக்கை விட்டு வெளியேறின. அதன் பிறகு ஈராக்கில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு சன்னி இனத்தவரான துணை ஜனாதிபதி தரிக் அல்-கஷெமி கைது செய்யப்பட்டது முதல், ஈராக்கில் அரசுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த தாக்குதல்களுக்கு எந்தக் குழுவும் உரிமை கோரவில்லை.


மூலம்[தொகு]