உள்ளடக்கத்துக்குச் செல்

ஈராக்கில் இருந்து அமெரிக்கப் போர்ப் படைகள் வெளியேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 19, 2010


கடந்த ஏழு ஆண்டுகளாக ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் போர்ப்படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஈராக்கின் மோசுல் நகரில் எம்1126 ஸ்டைக்கர் படையினர்

லூயிஸ் கோட்டையில் இருந்த 4ம் ஸ்ட்ரைக்கர் படைப்பிரிவின் 14,000 படையினர் ஈராக்கை விட்டு குவெய்த் நோக்கி இன்று வியாழக்கிழமை புறப்பட்டதாக அமெரிக இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இவர்களுடன் அங்கிருந்த அனைத் அமெரிக்க போர்ப்படையினரும் (combat troops) வெளியேறியுள்ளனர்.


ஆனாலும் ஈராக்கிய இராணுவத்திரின் பயிற்சிக்காக 50,000 அமெரிக்கப் படையினர் 2011 ஆம் ஆண்டு முடிவு வரை அங்கு தங்கியிருப்பார்கள். அத்துடன் மேலும் 6,000 உதவிப் படையினர் இம்மாத முடிவு வரை அங்கு தங்கியிருப்பர்.


கடைசி அமெரிக்கப் போர் வீரர் இன்று காலை 06:00 மணிக்கு ஈராக்கிய எல்லையைக் கடந்ததாக லெப். கர்னர் எரிக் புளூம் தெரிவித்தார்.


"நாங்கள் போரை நிறுத்தியிருக்கிறோம் ... ஆனால் ஈராக்கில் எமது வேலைகள் முடியவில்லை. ஈராக்கில் எமக்கு நீண்ட காலத் திட்டம் உள்ளது," என வெள்ளி மாளிகைப் பேச்சாளர் பி. ஜே. குரௌலி தெரிவித்தார்.

மூலம்

[தொகு]