ஈராக் தலைநகரத் தாக்குதல்களில் குறைந்தது 107 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 24, 2012

ஈராக் தலைநகர் பாக்தாதில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 107 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்தது 216 பேர் காயமடைந்தனர்.


பாக்தாதின் வடக்கே தாஜி என்ற இடத்திலேயே பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு 41 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஓராண்டு காலத்தில் ஈராக்கில் நடந்த மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும்.


மொத்தம் 19 ஈராக்கிய நகரங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.


அபூபக்கர் அல்-பக்தாதி என்பவர் ஈராக்கின் அல்-கைதா குழுவின் தலைவர் எனத் தன்னை அறிவித்துக்கொண்ட சில நாட்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த திசம்பரில் அமெரிக்க இராணுவத்தினர் வெளியேறிய பகுதிகளில் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் கூறியிருந்தார்.


"ஈராக்கின் பெரும்பான்மையான சுணி முசுலிம்கள் அல்-கைதாவுக்கு ஆதரவு தருகிறார்கள், அல்-கைதாவின் வரவை அவர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்," என அல்-பக்தாதி தெரிவித்ததாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம்[தொகு]